search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிகளை மீறல்"

    • கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த இடமாகும். வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எந்த நேரமும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

    இந்த நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் விதிகளை மீறி மஞ்சள் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    பின்னர் அவற்றை எடுக்க வந்த உரிமையாளர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் அவ்வாறு நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • 33 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    நீலகிரி,

    கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாலிபர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமலும், ஹெல்மெட் அணியாமலும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

    மனோகரன் மற்றும் போலீசார் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 33 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×