search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
    X

    பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்ட போது எடுத்த படம்.

    பல்லடத்தில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

    • கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த இடமாகும். வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எந்த நேரமும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

    இந்த நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் விதிகளை மீறி மஞ்சள் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    பின்னர் அவற்றை எடுக்க வந்த உரிமையாளர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் அவ்வாறு நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Next Story
    ×