search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு மையம்"

    பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீர் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

    இந்த தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.

    பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் வருகிற மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். #LokSabhaElections2019 

    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElections2019 #VotingBegins

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission
    புதுடெல்லி:

    காங்கிரஸ், தி.மு.க, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன.

    அதில், பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறையால் மொத்தம் பதிவான வாக்குகளில் 0.44 சதவீத வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடும். இதனால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் போகும். எனவே, 50 சதவீத வாக்குப்பதிவு மையங்களிலாவது ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது குறித்த பிரமாண பத்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt #ElectionCommission 
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அமைய உள்ள இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி அமைய உள்ள இடம், மின்சார வசதி, கழிப்பிட வசதி போன்றவை குறித்து தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் இரவில் தங்கவும், வாக்குப்பதிவு பெட்டிகளை வைக்கவும் போதிய இடவசதி உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகள் அமைய உள்ள இடங்களை போலீஸ் அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு பூட்டு வசதி செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் ஒவ்வொரு மையத்துக்கும் சென்று அங்கு பூட்டு வசதியுடன் அறைகள் இருப்பதை உறுதி செய்து அறிக்கை தயார் செய்து வருகிறார்கள். இந்த பணியில் உளவுத்துறை போலீசாரும், நுண்ணறிவுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ×