search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் 2019 - 4-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    பாராளுமன்ற தேர்தல் 2019 - 4-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

    பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீர் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

    இந்த தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.

    பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் வருகிற மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    Next Story
    ×