search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம் தாக்குதல்"

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.  தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..

    மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த 17 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். #Iraq #ISmilitantskilled
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #ISmilitantskilled
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். #ISMilitantsKilled
    காபுல்:

    ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் அங்கிருந்தவாறு பிறபகுதிகளில் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகின்றனர்.
     
    இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுடன் அமெரிக்கப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத்தினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #ISMilitantsKilled
    ஈராக் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ISmilitantskilled
    பாக்தாத்:

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
     
    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார். ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த டியாலா மாகாணத்தில் உள்ள ஹாத் அல் வக்ப் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை நோக்கி ஈராக் ராணுவத்தினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிக்ள் 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ISmilitantskilled
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 10 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் என்ற இடத்தில் தலிபான்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதியான மாவ்லாலி நஸ்ரத்துல்லா உள்பட 10 பயங்கரவாதிகள்
    கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #Talibanskilled
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 72 பேர் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #Insurgentskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள நாவா, கிலான் மற்றும் கியோக்யானி பகுதிகளில் வசிக்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் நாவா மாவட்டத்தில் 20 பேரும், கிலான் மாவட்டத்தில் 40 பேரும், கியோக்யானி மாவட்டத்தில் 12 பேரும் என மொத்தம் 72 பேர் பலியாகினர். மேலும்,  பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    மூன்று வாகனங்கள், 5 பைக்குகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றி அழிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டெயக் மற்றும் காராபாக் மாவட்டங்களில்
    தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அந்த பகுதிகளில் இருந்த 35 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    #Afghanistaninsurgents #insurgentskilled
    ×