search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரிக் பள்ளி"

    • 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆயுத ப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் மழலையர் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன புதிய கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். குழந்தை களை கவரும் வகையில் நவீன வசதிகளுடன் குளி ரூட்டப்பட்ட வகுப்ப றைக ளுடன் மழலையர் பள்ளிக்க ட்டிடம் அமைந்துள்ளது.

    தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில், பள்ளி தாளாளர் சனில் ஜாண், துணை தாளாளர் ஜார்ஜ் கண்டத்தில், பள்ளி முதல்வர் லிஸ்பெத், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர் சந்திரபோஸ், மேல்நி லைப்பள்ளி ஒருங்கி ணைப்பாளர் ராஜையன், துணை முதல்வர் பிரே ம்கலா, தலைமையாசிரியை மோனிக்கா ஸ்பினோலா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.

    100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது மழலையர் பள்ளி (பிரி-கேஜி) சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    • சாயல்குடி அருகே மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
    • விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா முன்னிலை வகித்தனர். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பாலமுருகன், சத்தியதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்

    திருமுருகன்பூண்டி :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது. இதை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தொடங்கி வைத்தார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டனர். இதில் கோவை ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் படைப்புகளும் மற்றும் கவிநிலா பதிப்பகத்தில் பள்ளி மாணவி மேகா பிரியதர்ஷினியின் சிறுகதை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட வசதியாக இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

    • செல்வஹேம்ராஜ் 12-ம் வகுப்பு தேர்வில் 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார்.
    • 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கல்வி சேவையில் 27ஆண்டுகளாக சிறந்து விளங்கி வரும் எம்.கே.வி.கே மெட்ரிக் பள்ளி மாணவர்களான செல்வஹேம்ராஜ்

    12-ம் வகுப்பு தேர்வில் 600க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார். அதில் 3 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    அதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். இவர் இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 500க்கு மேல் 28 மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 34 மாணவர்களும் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 மற்றும்

    பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாலமுருகன் பாராட்டினார். முதல் இடங்களை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ×