search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூப்பனார்"

    • தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.
    • மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 92-வது பிறந்த நாள் விழா சென்னை சேப்பாக்கத் தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

    மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி மூப்பனார் மற்றும் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான மூப்பனார் விருதுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபாலும், காமராஜர் விருதுக்கு பாலம் கல்யாணசுந்தரமும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    இருவருக்கும் ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் விடியல் சேகர், யுவராஜா, ராஜன் எம்.பி.நாதன், முனைவர் பாட்சா ஆகியோர் பேசினார்கள்.

    விழாவில் மாநில நிர்வாகிகள் ஜவகர்பாபு, சக்திவடிவேல், திருவேங்கடம், கே.ஆர்.டி.ரமேஷ், தி.நகர் கோதண்டன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ, அருண்குமார், பி.எம்.பாலா, கோவிந்தசாமி, முனைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசும்போது, மாணவர்களின் நலன்களை பாதுகாப்போம் என்று சொல்லும் தி.மு.க. அரசு தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து அவர்களை பாழ்படுத்துகிறது.

    நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் முன்னேறி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக நீட்டை நிறுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    ×