search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை மருத்துவமனை"

    • மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் எம்.எஸ்.டோனி அனுமதிக்கப்பட்டார்.
    • நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் வலியுடனேயே டோனி விளையாடி வந்தார்.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

    இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார்.

    இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி இன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.
    • விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    டேராடூன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து காரில் சென்றார். மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான கார் முழுமையாக தீப்பிடித்து உருக்குலைந்தது.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

    ×