search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள் பறிமுதல்"

    • 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
    • கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    ஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 48 கிலோ கெட்டு போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

    கெட்டு போன மீன்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கெட்டு போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரயுவிற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஓசூர் டவுனில் இயங்கி வரும் மீன் கடைகளில் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 23 கிலோ மீன்கள் கெட்டு போனவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. கெட்டு போன மீன்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்ப்பட்டது.

    அதே போல கிருஷணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் மார்க்கெட் மற்றும் பழையபேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்வள துறை ஆய்வாளர் கதிர்வேல், மீன் வளமேற்பார்வையாளர் நந்தகுமார், உணவு பாதகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 5 கிலோ பார்மலின் கலந்த கொடுவா மீன்களும், 20 கிலோ கெட்டு போன மீன்களும் என மொத்தம் 25 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. மேற்கண்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டன.

    • திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு அளிக்கப்பட்டன.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்த பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.

    இந்நிலையில் மீண்டும் பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள் அதிக அளவில் சென்றதால், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை அலுவலர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து இன்று திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    இதனை அடுத்து மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் பூசப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் ஒரு சில கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு அளிக்கப்பட்டன.

    மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர் .

    • சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது.
    • ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    இங்கு ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பார்மாலின் ரசாயனம் கலக்கப்பட்ட மீன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பார்மாலின் ரசாயனம் என்பது ஆய்வகத்தில் இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். மீன்களில் இதை உபயோ கித்தால் அந்த மீன்களை சாப்பிடு வோருக்கு பல்வேறு நோய்கள் ஏற் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து பார்பாலின் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்கள் பறிமுதல்.

    • 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சோிங்கிராஸ், ரெயில் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கபபட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டம் இல்லாததால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வருவதால், இங்கு வந்து சேர 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் மீன்கள் அழுக அதிக வாய்ப்புகள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் மீன்களை சரிபார்த்து நல்ல மீன்களை மட்டுேம வாங்க வேண்டும். இதேபோல் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனத்தை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    • ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வசந்த் நகர் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து இரவு நேரங்களில் மொத்த விற்பனை செய்து வருவதாக மாவட்ட மீன் வளத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் நேற்று மாவட்ட மீன்வளத்துறை சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் முருகேசன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அவர் வீட்டில், சட்டத்திற்கு புறம்பாக தொட்டி அமைத்து அதில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து இரவு நேரத்தில் மொத்த விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    பின்னர், தொட்டியில் இருந்த சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து, வியாபாரி முருகேசனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்த கெளுத்தி மீன்களை பஸ்தி பகுதியில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டி பிளீச்சிங் பவுடரை போட்டு புதைத்தனர்.

    இந்த பணியில் மேற்பார்வையாளர்கள் ராமன், மற்றும் மீன் வள உதவியாளர்கள் மஞ்சு மற்றும் ராஜேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் சுகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், விழுப்புரம் மீன்வள மேற்பா ர்வையாளர் சுதாகர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 110 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், இவ்வாறு கெட்டுப்போன மீன்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரை எச்சரித்தனர். கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தடைசெய்யப்பட்ட தேளிவகை மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
    • 150 கிலோ தேளிமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குஜிலியம்பாறை கடைவீதியில் தடைசெய்யப்பட்ட தேளிவகை மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

    இதனைதொடர்ந்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 150 கிலோ தேளிமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    மேலும் இதுபோல் தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ×