search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போச்சோ சட்டம்"

    பெண்ணை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் கப்பலூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னசாமி (வயது 34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சின்னசாமிக்கும், கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், சின்னச்சாமி கோவைக்கு அழைத்துச் சென்று மருதமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் உறவு வைத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சின்ன சாமியை கைது செய்தார்.

    முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது57) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்திருந்தார்.

    அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தும் படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது உதயகுமார் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    மனைவியை தவிக்க விட்டு மைத்துனியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    தாடிக்கொம்பு:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23). இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கரூரில் வட்டி கடையில் வேலை பார்த்த அன்பரசன் அந்த வேலையை விட்டு விட்டு மாமனார் வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    அவரது மனைவியின் தங்கை திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அன்பரசனுக்கு மனைவியின் மீது இருந்த மோகம் அவரது தங்கையின் மீது திரும்பியது.

    இதனால் அவரிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்தார். தனது கணவரும் தங்கையும் மாயமானதைக் கண்டு அன்பரசனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். மதுரை மாவட்டம் கப்பலூரில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து வந்தனர். அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×