search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    • 745 பேர் மீது வழக்கு
    • கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய 745 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் சோதனை செய்தனர். வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டும் தங்கி உள்ளார்களா? வேறு நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கோவை பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலை யத்திலிருந்து வெளியூருக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பிளாட்ஃபாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.கன்னியாகுமரி நாங்குநேரி வள்ளியூர் இரணியல் குழித்துறை ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி களியக்கா விளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×