search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூலித்தேவர்"

    • மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் மாவீரர் பூலித்தேவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

    சென்னை:

    மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

    அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்கமாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    கோவில்பட்டி:

    முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.

    விழாவில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாமன்னர் பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் அங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், இன்னர்வீல் கிளப் பட்டயத் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×