search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு சட்டம்"

    • பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
    • விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்க தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒழுங்குமுறைபடுத்தும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் தனியார் பள்ளி சங்கங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பணி பாதுகாப்பு இல்லாமல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்ந்த கல்வி கற்று, ஆனால் மிகப் குறைந்த சம்பளத்தில் தன்னிகரில்லாத கல்வி சேவை ஆற்றி வரும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலத்தைப் பேணும் வகையில் நாட்டிற்கு வழிகாட்டி வரும் அவர்களின் வாழ்வு மேம்பட தனியார் பள்ளி ஆசிரியர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர் , ஆசிரியர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துதில் அக்கறை காட்டக் கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அனைத்து பள்ளிகளிலும் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனையோடு தங்களின் நியாயமான கோரிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறையில் வாங்க வேண்டிய பல்வேறு அரசு அனுமதிகளை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்து துன்பப்படுகிறார்கள். தங்கள் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களைப் போல தாங்களும் தெருவில் இறங்கிப் போராடுவது நீதிமன்றங்களில் வழக்கு வழக்கு கொடுத்து தங்கள் உரிமைகளின் நிலைநாட்டுவது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    தனியார் பள்ளி சங்கங்களின் கோரிக்கைகள், உரிமைகள் மீட்டெடுக்க பள்ளிகளை, பள்ளி நிர்வாகிகளை பாதுகாத்திட தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.

    2011-ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டி.டி.சி.பி. /சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி வேண்டாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், கல்வித்துறை அதிகாரிகள் போட்ட ஆணை இருந்தும் மீண்டும் மீண்டும் கட்டிட அனுமதி இருந்தால் தான் அங்கீகாரம் இல்லையென்றால் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் கொடுக்கும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கும் சூழ்நிலையை மாற்றி நீதிமன்ற ஆணைப்படி தமிழக கல்வித்துறையின் உத்தரவுகளின் படி செயல்பட தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    ஆர்.டி.இ. 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை குறைப்பது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை ரூ 6000 ஆக குறைத்துள்ளதை தமிழகஅரசு மறு பரிசீலனை செய்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அந்தந்த ஆண்டுக்குரிய கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு உடனே அனுப்பிட வேண்டும்.

    தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரி மின் கட்டண உயர்வு பள்ளி வாகனங்களின் சாலை வரியை இந்த மாதம் முதல் 100 சதவீதம் உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

    விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும். தனியார் பள்ளிகள் மட்டும் பணம் கொடுத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கும் போதுள்ள புத்தக தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் ஆசிரி யர்களையும் பாதுகாப்பதற்காக. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு சட்டம் உள்ளது போல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.

     கடலூர்:

    சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் ரயில்வே காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிதம்பரம் ரயில்வே போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் அருண்குமார் , அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளவரசி, கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.

    ×