search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகல்வித்துறை"

    கரூரில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 83 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து புத்தாக்க மாவட்ட அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியை வாங்கல் எல்லைமேடு வெற்றிவினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள 83 வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளின் 83 அறிவியல் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. 

    அறிவியல் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவியல் திறனை வளர்ப்பதற்காகவும், சமுதாய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் குறைந்த செலவில் அந்த படைப்புகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் தங்களது படைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆர்வத்துடன் விளக்கம் அளித்தனர்.

    ஒவ்வொரு படைப்புக்கும் மாணவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வரவுவைக்கப்படும். இதில் 17 படைப்புகள் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் 8 படைப்புகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வுசெய்து அனுப்பப்படுகிறது. அதில் தேர்வானவர்கள் தேசிய அளவில் கலந்துகொள்வார்கள். மாணவ,மாணவியர்களின் அறிவியல் படைப்புகளை தேர்வு செய்ய தேசிய புத்தாக்க நிறுவன நடுவர் மொஜீன், கரூர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த அறிவியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். நிறைவாக பெங்களூரு தேசிய கல்விவள நிறுவன இயக்குநர் ஆர்.பால மோகன் ராமசாமி மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினார். இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல், மாவட்ட கல்வி அதிகாரிகள் கனகராஜ், கபீர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், பள்ளி தாளாளர் சாமிநாதன், ஆலோசகர் பழனியப்பன், முதல்வர் பிரகாசம், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #Toppers #SchoolEducation
    சென்னை:

    பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது எனவும் அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-

    10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Toppers #SchoolEducation

    ×