என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகல்வித்துறை"
- பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்.
- முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வி அலுவலர்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.
- கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும்.
- 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வருகின்றனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும்.
எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடு வதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் - சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 2, 2024
கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய…






