search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதி சுட்டுக்கொலை"

    • சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான்.
    • அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.

    கராச்சி:

    இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

    இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.

    சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான். அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்தான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.

    கடந்த 2015-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    13-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஹபீஸ் சயீதுவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவனது முக்கிய கூட்டாளி அட்னான் அகமது சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், அட்னான் அகமதுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வந்தது.

    தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.

    2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அட்னான் அகமது முக்கிய பங்காற்றினான்.

    இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.

    பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
    • இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.

    சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    ×