ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com