search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் நேர்த்திக்கடன்"

    • கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.
    • ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. கோவில் பழுதடைந்த நிலையில் 12 வருடங்களாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் கோவில் புணரமைப்பு பணி நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கோவில் குடமுழக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் காரணமாக கோவில் விழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள், பொதுமக்கள் ஒன்று கூடி கோவிலில் விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோடங்குடி கிராமத்தில் உள்ள நாகல் ஏரி கரையிலிருந்து பூங்கரகம் சூடிக்கப்பட்டு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்தனர்.இந்த பால்குடமானது கோடங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் கோவிலை வந்து அடைந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக எடுத்து வந்த பால் குடங்களில் உள்ள பாலை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • குழந்தை வரம் கேட்டு நேர்த்திக்கடன்
    • தீ மிதித்து பெண்கள் வழிபாடு

    சேத்துப்பட்டு:

    தேசூர் அடுத்த திருமால்பாடி கிராமத்தில் குளக்கரை அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.

    இதனையொட்டி வள்ளி தெய்வானை முருகர் உற்சவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வைத்து சரவணன் ஜோதி சுரேஷ் பாஸ்கரன் சார்பில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தங்க தாலி, வரிசை தட்டுகள் வைக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது.

    மறுநாள் மூலவர் பழனி ஆண்டவர், உற்ச வர் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. பின்னர்திருவிழா கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது. கண்டராமன் குளத்திலிருந்து பூக்கள், பூ கரகம் ஜோடித்துக் கொண்டு வந்து கோவிலில் வைத்தனர்.

    மறுநாள் 108 சுமங்கலி பெண் கள் பால் குடத்துடன் வீதி உலா வந்து பழனி ஆண்டவருக்கும் உற்சவர் வள்ளி முருகன், தெய்வானை ஆகிய சுவா மிகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    நேற்று நேர்த்திக்கடனாக மிளகாய் இடித்து தூள் செய்து கரைத்து திரண்ட பக்தர்கள் மீது நேர்த்திக்கடனாக அபி ஷேகம் செய்தனர். மேலும் குழந்தை வரம் கேட்டு பெண்கள் பக்தர் மார்பில் கல் உரலை வைத்து இதில் மஞ்சள் போட்டு குழந்தை வரம் கேட்கும் பெண்கள் உலக்கை கொண்டு இடித்தனர்.

    அதன்பின் பழனி ஆண்டவர் பாதத்தில் மஞ்சள் வைத்து பூஜை நடந்தது. இதனை யொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. பம்பை, உடுக்கை, மேள கச்சேரியுடன் புஷ்ப பல்லக்கில் பழனியாண்டவர் வீதி உலா வந்தார்.

    அப்போது 21 அடியில் உயரம் பறக்கும் காவடியில் பறந்து வந்து பக்தர் பழனி ஆண்டவருக்கு மாலை அணிவித்தார். 5 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி விழா நடந்தது.

    இடும்பன் சுவாமிக்கும் பூஜை நடந்தது. ஏற்பாடு களை திருமால்பாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவிலில் இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.
    • நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளை யார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகள் கொரோ னாவுக்கு பிறகு இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.

    9ந் தேதி காலையில் அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும், சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு, தீபா ராதனை செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். இந்நிகழ்ச்சியில் பிள்ளையார்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராம பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழி பட்டனர்.

    • துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் ஆதி பராசக்தி கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது.

    காலையில் அம்மன் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதில் பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்தனர். பின்னர் கொதிக்கும் எண்ணெய்யில் வடையும், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் அம்மனுக்கு திருவீதி உலாவும், நாடகம் நடந்தது. கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா அம்மனுக்கு வளையல் அலங்காரம், இரவில் தேர் உட்பிரகார உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒண்ணுபுரம் சவுடேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூர முன்னிட்டு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×