search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாயவிலை கடை"

    • நியாய விலை கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சாத்தூரில் உள்ள நியாய விலை கடையின் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த ரத்தினம் மாலா என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில் குமார்,பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் முருகவேல், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் விநாயகரசன், இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலை கடைைய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.

    பின்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 லட்சத்து 248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் சூலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், "பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.

    இந்நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும். 12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது.

    பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகரில் நியாயவிலை கடைகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்.

    நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 91 விற்பனையா ளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 12 கட்டுநர்கள் (பேக்கர்) பணி யிடங்க ளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbsvg.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யூ-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக்கட்ட ணங்கள் செலுத்த தேவையான சலான்களை மேற்கண்ட இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbsvg22@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய அலைபேசி எண் 70942 55260 வாயிலாகவும் சிவகங்கை மாவட்ட ஆன்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×