search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை சீட்டு"

    • விருதுநகரில் நகை சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்த 2 பேர் மதுரை கோர்ட்டில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நகை சீட்டு நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி செய்ததாக நகைக்கடை அதிபர் பாலாஜி வரதராஜன் மற்றும் பால விக்னேஷ், பாவாளி பவுன்ராஜ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சுப்பிரமணியன் மனைவி முத்துமாரி ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாலாஜி வரதராஜன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பால விக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • விருதுநகரில் ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • நகை கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலைக் கரையை சேர்ந்தவர் கருப்ப சாமி (வயது 36). இவருக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டில் சேர்ந்துள்ளார். அந்த நகை கடையின் வரதராஜன், சுப்பிர மணியன், பாலவிக்னேஷ், பவுன்ராஜ் ஆகியோர் நிர்வாக பங்குதாரர்களாக உள்ளனர். கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் பணம் கட்டி வந்துள்ளனர்.

    இதற்கிடையே அதன் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நகை சீட்டு பணம் செலுத்துவதற்காக கருப்பசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

    கருப்பசாமி அடுத்த மாதம் சென்று பார்த்தபோது, கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்ததும் கடை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. இதே நகை கடையின் உரிமையாளர்கள் மதுரையில் நடத்தி வரும் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இந்த நகை கடையில் கருப்பசாமி 3 கால் லட்சம் செலுத்தியுள்ளார். கருப்ப சாமிக்கு நகைக்கடையை அறிமுகம் செய்தார். வாழவந்தான் ரூ. 40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருவதாகவும், மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் நகை சீட்டு தொகை சேர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. நகைசீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் நகைக்கடை மூடப்பட்டுள்ளது.

    இந்த மோசடி குறித்து கருப்பசாமி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் வரதராஜன் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    ×