search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் எண்ணை"

    • ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.73-க்கு மட்டுமே அரசு வழங்குகிறது.
    • தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் தாராபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் பிரபுராஜா தலைமை தாங்கினார்.

    அப்போது தென்னை மரங்கள் வளர்ப்பு மற்றும் தென்னையினால் கிடைக்கும் பொருட்களை எப்படி? பணமாக மாற்றுவது தென்னை கழிவுகளை விவசாய நிலங்களுக்கு எவ்வாறு உரமாக மாற்றுவது போன்ற ஆலோசனைகளை வழங்கி தென்னை விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:-

    தென்னை விவசாயிகளை கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை ரூ.108.60 பைசா உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.73-க்கு மட்டுமே அரசு வழங்குகிறது. ஒவ்வொரு தென்னை விவசாயிக்கும் கொப்பரை தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.35 நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசு எம்.எஸ்.பி.சாமிநாதன் கமிட்டியின் மூலம் வழங்கப்படும் ஆதார விலையை சட்டப்பூர்வ விலையாக அங்கீகரிக்க வேண்டும்.

    ஆதார விலையை விட குறைவாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காயை வாங்கும் இடைத்தரகர் மற்றும் அரசு கொள்முதல் கூடங்களில் வாங்கினால் வாங்கப்படும் நபர் அல்லது அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    எனவே மத்திய அரசாங்கம் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெயை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்னை விவசாய மேம்பாட்டுக்குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. இதை தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.
    • கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கயம் :

    சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது.

    சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

    கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார். காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

    காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யானது டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் கூறியதாவது:- சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும்.

    தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கயம் :

    காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    ×