search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துவரம் பருப்பு"

    • இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
    • உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தது.

    இந்நிலையில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதியை, 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    • கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
    • தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதலாக உளுத்தம் பருப்பு வழங்கப்படும், சர்க்கரை வழங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளாக அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, துவரம் பருப்பிற்கு பதிலாக தரமற்ற, மஞ்சள் பருப்பை அதிக விலைக்கு வாங்கி வழங்க முயற்சித்து வருகிறது. இதன்மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் தி.மு.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

    மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு ஏற்படும் இழப்பினைக் கருத்தில் கொண்டும், வெளிப்படையான முறையில், குறைந்த விலையில், தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துவரம் பருப்பு விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    தென்னிந்தியாவில் சாம்பார், கூட்டு, கடையல், வடை உள்ளிட்ட பல விதமான உணவு வகைகளை தயார் செய்ய துவரம் பருப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வட இந்தியாவிலும் துவரம் பருப்பு சமையலில் பல விதங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போது துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் இந்தியாவில் துவரம் பருப்பு உற்பத்தி 39 லட்சம் டன்னாக இருந்தது. 2022-2023-ம் நிதியாண்டில் துவரம் பருப்பு உற்பத்தி 30 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்ய நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் கூறியதாவது:- இந்தியாவில் துவரம் பருப்பு தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இந்த ஆண்டு 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 லட்சம் டன் துவரம் பருப்பு மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள துவரம் பருப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் வந்துவிடும்.

    துவரம் பருப்பு விலையை கட்டுக்குள் வைத்திருக்க கையிருப்பில் உள்ள 50 ஆயிரம் டன் துவரம் பருப்பை சந்தையில் விடவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் துவரம் பருப்பு விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
    • ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்கரனுக்கு ரூ.7,600 அபராதம் விதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பாபநாசம் தாலுகாவில் கூட்டுறவு அங்காடிகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஏர்வாடி கூட்டுறவு அங்காடியில் அங்கீகார சான்று இல்லாமல் 42 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து 400 கிலோ அரிசி, 11 கிலோ துவரம் பருப்பு, 5 லிட்டர் பாமாயில் ஆகிய ரேஷன் பொருள்கள் எடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாலகிருஷ்ணனுக்கு ரூ.11, 250 அபதாரம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்பத்துவேலி அங்காடியில் 53 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து 200 கிலோ அரிசி, 13 கிலோ சர்க்கரை அங்கீகார சான்று இல்லாமல் எடுத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதில் ஈடுபட்ட விற்பனையாளர் பாஸ்க ரனுக்கு ரூ.7,600 அபதாரம் விதிக்கப்பட்டது. இரண்டு விற்பனையாளர்கள் மீதும் துறையின் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கபிலன் உடன் இருந்தார். மேலும் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், வழுத்தூர் கூட்டுறவு அங்காடியில் சோதனை ஈடுபட்டபோது அரிசி 100 கிலோ கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட விற்பனையாளர் குமாருக்கு ரூ.2,500 அபதாரம் விதிக்கப்பட்டது.

    ×