search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலங்கள்"

    • சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை யாற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம். ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் 7 தரைப் பாலங்கள் அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று துவக்கி வைத்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோயில் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய கம்மியம் பட்டு, காவேரிபட்டு, சின்னக்கம்மியம் பட்டு, பெரிய மோட்டூர், கூத்தாண்ட குப்பம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோயில் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சென்று வர இந்த பிரதான சாலை மட்டுமே உள்ளது.

    இந்த சாலையில் நடுவில் ஆங்காங்கே பாலாற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள், கால்வாயை கடந்த செல்ல பாலம் கட்டி தர வேண்டும் என ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கால்வாய்களை கடந்து செல்ல 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்ட ரூ.8.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார்.

    உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் முன்னிலை வகித்தார். சாலை ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு தரைப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    ×