என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை யாற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம். ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Next Story






