search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை பெரியார் விருது"

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
    • 2023-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    • விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்

    திருப்பூர்:

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பணம், 1 பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள். 2023-ம் ஆண்டுக்கான விருது பெறவிண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன்காரணமான சாதனைகள், தங்களது சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

    விண்ணப்பதாரர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம்,முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடையவராயின் அதற்குரிய ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
    • விருதாளர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்வு செய்யப்படுகிறார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை மரியாதை செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது,

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்வு செய்யப்படுகிறார்.

    2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் படைத்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்-31.10.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும
    • விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதி உரையும் வழங்கப்படுகிறது.

    விருதாளரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்வார்.

    இந்த ஆண்டிற்கான விருது வழங்க உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி தேதி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
    • சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    ×