search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு முகாம்"

    • திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.
    • காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. இதையொட்டி வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படும். காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படும். யாருக்காவது தொடர் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டால், அவர்களை அழைத்து, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பை மாற்றி, பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, இனி, ஞாயிற்றுக்கிழமைக்கு பதில், சனிக்கிழமையில் முகாம் நடக்கும். நடப்பு வாரம், 5-ந் தேதிக்கு பதிலாக, இன்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ஞாயிறன்று முகாம் நடத்தினால், அதற்கு அடுத்த நாள் (திங்கள்) டாக்டர், செவிலியர் குழுவுக்கு விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது. சனிக்கிழமை முகாம் நடத்தினால், அதற்கான அவசியம் இல்லை. எனவே சனிக்கிழமைக்கு காய்ச்சல் தடுப்பு முகாம் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

    • மருத்துவ சிகிச்சை அளித்தனர்
    • பயனாளிகளுக்கு ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு ஊனம் தடுப்பு முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் பிரீத்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் பாதிப்புக்குள்ளான வர்களை பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

    பயனாளிகளுக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க எம். சி.ஆர் காலணிகள், ஊன்றுகோல் உள்ளிட்ட ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமின் போது தொழுநோய் மருத்துவ அலுவலர் வெற்றிச் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    சேலம்:

    5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவச மாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றர்.

    அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் ஓ.ஆர்.எஸ். பகுதி அமைக்கப்படும் மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.

    இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ஓ.ஆர்.எஸ். (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.

    வயிற்றுப்போக்கு எளிதில் தடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு பற்றிய விழிப்புணர்வின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம்.

    இதனை கருத்திற்கொண்டு தேசிய அளவில் சேலம் மாவட்டத் தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலை யங்கள், 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 2,696 அங்கன்வாடி மையங்களில் முகாம் நடத்துதப்படுகிறது.

    இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளைச் சார்ந்த 3,212 பணி யாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் இந்காத முகாம் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.
    • பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 முதல் 24-ந் தேதி வரை இரு வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடக்க உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.

    இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றன. பிறந்த குழந்தைகளில் பிறந்த உடன் சீம்பால் புகட்டாத குழந்தைகள், பிறந்து 6 மாதம் வரை பிரத்யோகமாக தாய்ப்பால் புகட்டாமல் இருத்தல், சுகாதாரமற்ற வளர்ப்பு முறை, கை சுத்தம் பேனாமல் இருத்தல், வளர்ப்பு குழந்தைகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 45,354 குழந்தைகள் உள்ளனர்.

    இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை முன்னிட்டு அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு 'சின்க்' மாத்திரை, ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கப்படும்.

    பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலின் முக்கியத்துவம், கை கழுவுதல் முறை பற்றி விளக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல் முறை விளக்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×