search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் வில்லே"

    குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக டேவிட் வில்லே கூறினார். #IPL2019 #CSK #DavidWilley
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லே இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் குடும்ப விஷயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். ஏற்கனவே காயத்தால் நிகிடி ஆட முடியாத நிலையில், சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக டேவிட் வில்லேயும் விலகி இருக்கிறார். #IPL2019 #CSK #DavidWilley

    லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் போட்டியில் விளையாடியதுபோல் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    முதல் 10 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்வேட்டைக்கு தடைபோட்டார் குல்தீப் யாதவ்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ரூட் நிதானமாக விளையாட மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், 51 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 30.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் டேவிட் வில்லே ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து 41.4 ஓவரில் 239 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 96 பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.


    31 பந்தில் 51 ரன்கள் சேர்த்த டேவிட் வில்லே

    டேவிட் வில்லே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் டேவிட் வில்லே இரண்டு பவுண்டரியுடன் ஒரு சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பாண்டியா வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் அடித்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட். 109 பந்தில் சதம் அடித்த ஜோ ரூட்டிற்கு இது சர்வதேச அளவில் 12-வது சதமாகும்.

    டேவிட் வில்லேயின் அதிரடியால் 48-வது ஓவரை 300 ரன்னைத் தாண்டியது. டேவிட் வில்லே கடைசி ஓவரின் 5-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த டேவிட் வில்லே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    முதல் டி20 போட்டியின்போது குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் செய்த காரியங்கள் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடி சதத்தால் இந்தியா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. தனிப்பட்ட முறையில் இப்படி செய்ய நான் நினைக்கமாட்டேன். இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்’’ என்றார்.
    ×