search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லி கற்கள்"

    • பறக்கை அருகே ரோட்டோரத்தில் கிடக்கும் ஜல்லி கற்களால் அபாயம்
    • காரும் தலைகீழாக கவிழ்ந்தது

    நாகர்கோவில் :

    மணக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் குளத்துவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகி றது.

    கடந்த 3 மாதமாக பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மணக்குடியிலிருந்து நாகர்கோவில் நோக்கி இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது லாரி ஏறியது. அப்போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து லாரி சென்றது. டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாரா தவிதமாக ரோட்டோ ரத்தில் இருந்த கழிவுநீர் கால்வாயில் லாரியின் சக்கரம் சிக்கி சரிந்தது. இதில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது.

    லாரியின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியதுடன் கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல் நேற்று அந்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி மீது கார் ஒன்று மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பகுதி பொதுமக்கள் காரை உடனடியாக மீட்டனர். விபத்தில் சிக்கிய காரின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அடுத்தடுத்து நடந்து வரும் விபத்துகளால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத அளவிற்கு சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் விபத்து க்கள் நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    எனவே போர்க்கால அடிப்படையில் உடனடி யாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அந்த பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி நேற்று முன்தினம் அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக ரூ.2,04,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊஞ்சபாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதி க்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,34,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆமத்தான்பொத்தையில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.அப்போது அங்கு வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்த போது எந்த விதமான அரசு அனுமதியும் இன்றி ஜல்லி கற்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடி விட்ட தாக கூறப்படுகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகுமார்அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×