search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி
    X

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி

    • பறக்கை அருகே ரோட்டோரத்தில் கிடக்கும் ஜல்லி கற்களால் அபாயம்
    • காரும் தலைகீழாக கவிழ்ந்தது

    நாகர்கோவில் :

    மணக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் குளத்துவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகி றது.

    கடந்த 3 மாதமாக பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மணக்குடியிலிருந்து நாகர்கோவில் நோக்கி இன்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது லாரி ஏறியது. அப்போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து லாரி சென்றது. டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாரா தவிதமாக ரோட்டோ ரத்தில் இருந்த கழிவுநீர் கால்வாயில் லாரியின் சக்கரம் சிக்கி சரிந்தது. இதில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது.

    லாரியின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியதுடன் கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல் நேற்று அந்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி மீது கார் ஒன்று மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பகுதி பொதுமக்கள் காரை உடனடியாக மீட்டனர். விபத்தில் சிக்கிய காரின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அடுத்தடுத்து நடந்து வரும் விபத்துகளால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத அளவிற்கு சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் விபத்து க்கள் நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    எனவே போர்க்கால அடிப்படையில் உடனடி யாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் அந்த பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×