இரணியல் அருகே அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய டெம்போ பறிமுதல்

டிரைவர் தப்பி ஓட்டம்சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
இரணியல் அருகே அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய டெம்போ பறிமுதல்
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள ஆமத்தான்பொத்தையில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.அப்போது அங்கு வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்த போது எந்த விதமான அரசு அனுமதியும் இன்றி ஜல்லி கற்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடி விட்ட தாக கூறப்படுகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகுமார்அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com