search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திரதினவிழா"

    • பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    ஊட்டி

    ஊட்டி நஞ்சநாடு, கப்பத்தொரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 77வது சுதந்திரதின விழா நடந்தது. அப்போது பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ,மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ராமகிருஷ்ணா பள்ளியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பாடவேளை உருவாக்கி, அதன்மூலம் மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, பொது அறிவு, கட்டுரை, ஓவியம் மற்றும் கைத்தொழில் ஆகியவை கற்று தரப்படுகி ன்றன. இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்க ளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
    • விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கு உதவி மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் தினேஷ்குமார் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு திருப்பூர் குமரன் நினைவுத்தூண் நோக்கி ஊர்வலமாக சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர் ,துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூரில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • கலெக்டர் பிரபுசங்கர், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

    கரூர் :

    இந்தியத்திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித் தார்.

    தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். மேலும் சிறந்த விவசாயி, சிறந்த தொழில்முனைவோர், தீண்டாமை இல்லா கிராமம் குழந்தை திரும–ணம் நடைபெறா கிராமம் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இதேபோல், மொத்தம் 59 நபர்களுக்கு ரூ.1,01,26,225 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

    பின்னர் சுதந்திர போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி (எ) காளிமுத்து என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது மணைவி பழனியம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமந்திராசலம், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
    • திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீ–சாரின் அணிவகுப்பு மரி–யாதையை ஏற்றுக் கொண்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 75-வது சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உலக சமாதானம் விரும்பும் பொருட்டு வெண்புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 258 பேரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வழங்கல்அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சிவக் குமார் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், மக்கள்பிரதிகளும் கலந்துகொண்டனர்.

    • விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.
    • முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர் :

    சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி மைதானம் ஆகியவை போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.

    ரெயில் நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்துப்பணிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரில் 10-க்கும் அதிகமான இடங்களில் விடிய, விடிய வாகன சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இது தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    ×