search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர போராட்ட தியாகி"

    • அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.
    • படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    சென்னை:

    சுதந்திர போராட்ட தியாகி, நேரு பிரதமராக இருந்தபோது எம்.பி., காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவரும் அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.

    இந்த படத்தை கோவை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஜோசப் பேபி கக்கனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாடல் ஒலிநாடா மற்றும் டிரைலர் காட்சிகளை வெளியிட்டார். முதல் பிரதியை கக்கனின் மகள் கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவருமான ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இசையமைப்பாளர் தேவா, கக்கன் வேடத்தில் நடிக்கும் ஜோசப் பேபி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
    • மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஓசூர்,

    ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, 103 வயதான சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற நடத்துனர் சோமசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில், சுந்தரம் நன்றி கூறினார்.

    • இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளைக் கவுரவிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காட்சியில் தமிழ் வளா்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழறிஞா்கள் 45 பேரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் ரெயில் நிலையம் அருகில் உள்ள குமரன் நினைவகத்தில் மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 63 பேரின் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று கண்காட்சியை திறந்துவைத்தனா். பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளைக் கவுரவிக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திப்போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு நாளைப் போற்றும் வகையில் இந்தக்கண்காட்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, தென்காசி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் இந்த வார இறுதிக்குள் மாவட்ட அளவிலான சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி திறந்துவைக்கப்படும் என்றாா்.

    இந்தக் கண்காட்சியில் தமிழ் வளா்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழறிஞா்கள் 45 பேரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில்திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா்செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா்பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி, தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் சமிதி மாநில பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.

    ×