search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பட பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
    X

    சுதந்திர போராட்ட தியாகி 'கக்கன்' பட பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    • அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.
    • படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    சென்னை:

    சுதந்திர போராட்ட தியாகி, நேரு பிரதமராக இருந்தபோது எம்.பி., காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவரும் அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.

    இந்த படத்தை கோவை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஜோசப் பேபி கக்கனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாடல் ஒலிநாடா மற்றும் டிரைலர் காட்சிகளை வெளியிட்டார். முதல் பிரதியை கக்கனின் மகள் கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவருமான ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இசையமைப்பாளர் தேவா, கக்கன் வேடத்தில் நடிக்கும் ஜோசப் பேபி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×