என் மலர்
நீங்கள் தேடியது "கோழிக்கோடு விமான நிலையம்"
- வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன.
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கரிப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கேரள மாநிலத்தில் பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையத்தில் ஒன்றாக கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சு வாகனம் உள்ளிட்டவைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. விமான நிலையம் அருகில் என்பதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக மஞ்சேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அதிநவீன தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன.
தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 4 பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு உள்ளிட்ட 5 வாகனங்களும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது தெரியவில்லை.
தீப்பிடித்த 4 பஸ்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் இருந்து முனையத்திற்கும், முனையத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானத்திற்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். அந்த வாகனத்தை இயக்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
பஸ்களுக்கு யாரேனும் மர்மநபர்கள் தீ வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க, விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாங்காக் மற்றும் அபுதாபி வழியாக வந்த அந்த பயணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- விமான நிலையம் அருகே பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் விமான நிலையத்தை படம் எடுக்க வந்ததாகவும், ஒருவரை வரவேற்க வந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் அவர்கள், அபுதாபியில் இருந்து வந்த விமான பயணி ஒருவர் கொண்டு வந்த கஞ்சாவை பெற்றுச் செல்ல வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விமான பயணி யார்? என போலீசார் விசாரணையில் இறங்கினர். ஆனால் குறிப்பிட்ட அந்த பயணி அதற்குள் காரில் தப்பித்துச் சென்று விட்டார். கண்காணிப்பு காமிரா மூலம் அவர் தப்பித்துச் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கினர்.
ஆனால் காரில் அந்த நபர் இல்லை. அதேநேரம் அவரது உடமைகள் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது 18 கிலோ கலப்பின கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 கோடி ஆகும். பாங்காக் மற்றும் அபுதாபி வழியாக வந்த அந்த பயணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக விமான நிலையம் அருகே பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கண்ணூர் ரிகில் (வயது 35), தலச்சேரி ரோஷன் ஆர்.பாபு என தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வந்தன.
தங்க கடத்தலை தடுக்க கேரள விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ஒரு விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பயணிகள் இருவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெண் பயணியின் கொண்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் 556 கிராம் தங்க கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதுபோல வாலிபர் அணிந்திருந்த ஷூவின் சாக்சுக்குள் 105 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்ததாக காசர்கோட்டை சேர்ந்த ஜமீலா (வயது 36), கோழிக்கோட்டை சேர்ந்த பைசல் (22) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






