search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை செய்ய முயற்சி"

    • ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன் (வயது35). கட்டிட தொழிலாளி.

    இவடைய மனைவி ரேகா. இவர்களுக்கு கடந்த 26.7.2021 அன்று குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை முனிசந்திரன் அடித்துள்ளார்.

    அப்போது ரேகாவின் உறவினர்களான வெங்கடேஷ் (45), மாதேஷ் (31) ஆகிய இருவரும் முனி சந்திரனை தடுத்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அப்போதைய போலீஸ் இன்ஸ்ெபக்டர் சுப்பிரமணி முனிசந்திரனை கைது செய்து கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து போலீசார் முனிசந்திரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜரானார்.

    • காளீஸ்வரன் தனது மனைவி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
    • இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் பாபு தோட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (26). டிரைவர். இவரது மனைவி மைவிழி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 வீட்டு பெற்றோர்களிடமும் எதிர்ப்பு இருந்து வந்தது.இந்த நிலையில் காளீஸ்வரனுக்கும், அவரது மனைவி மைவிழிக்கும் கருத்து வேறுபாடுகாரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கடந்த 2மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை விட்டு பிரிந்து சென்று ஈரோடுஅக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மேலும் அவரது கணவர் காளீஸ்வரன் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மைவிழி கணவர்வீட்டிற்கு வராமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் மைவிழி இரவு 9 மணியளவில் தனது குழந்தையை பார்க்க தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரன் தனது மனைவி மைவிழியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

    மேலும் நீ உயிரோடு இருந்தால் தான் எனக்கு பிரச்சினை, உன்னைகொன்றால் தான் நானும்எனது மகளும் நன்றாகஇருக்க முடியும்என்று கூறி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.

    இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    இதனைப்பார்த்த உறவினர்கள் மைவிழியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இது குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீசில் புகார்செய்தார். போலீசார் காளீஸ்வரன்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாலமுருகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
    • தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்து கத்தியை எடுத்து பாலமுருகன் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு தெற்கு தோட்டம், 2வது வீதியில்வாலிபர் ஒருவர் கழுத்துஅறுக்கப்பட்ட நிலையில் ரோட்டில்கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்து அறுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் கே.வி.ஆர்., நகர்,தெற்கு தோட்டம், 5வதுசேர்ந்த வீதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 42) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாலமுருகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது (25) என்பவர்தான் பாலமுருகனை கழுத்தை அறுத்தது தெரியவந்தது. 

    இதையடுத்து ஆனந்தை தேடி வந்தனர். அப்போது மது போதையில் வெளியூர் தப்ப முயன்ற ஆனந்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது பாலமுருகனும், ஆனந்தும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். 

    அப்போது ஆனந்திடம் பாலமுருகன் ரூ. 500 கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை அவர் நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பிக் கொடுக்கவில்லை.

    நேற்று இரவு வழக்கம் போல் இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ரூ.500 கடனை திருப்பி தரும்படி ஆனந்த் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆனந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×