search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
    X

    மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

    • ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன் (வயது35). கட்டிட தொழிலாளி.

    இவடைய மனைவி ரேகா. இவர்களுக்கு கடந்த 26.7.2021 அன்று குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை முனிசந்திரன் அடித்துள்ளார்.

    அப்போது ரேகாவின் உறவினர்களான வெங்கடேஷ் (45), மாதேஷ் (31) ஆகிய இருவரும் முனி சந்திரனை தடுத்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அப்போதைய போலீஸ் இன்ஸ்ெபக்டர் சுப்பிரமணி முனிசந்திரனை கைது செய்து கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து போலீசார் முனிசந்திரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜரானார்.

    Next Story
    ×