search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் மழை"

    • எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    வடமேற்கு வங்காள விரிகுடாவிற்கும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களிலும் நாளை (11-ந்தேதி) இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தனர்.
    • மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மழை ஆரம்பித்த பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

    மலையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இது தவிர பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தனர். இருந்தும் கடந்த வாரம் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

    காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இந்த மாதம் மட்டும் மாநிலம் முழுவதும் 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
    • சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் வருகிற 2-ந்தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    நேற்றும் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    ×