search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வாலிபர் கைது"

    போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிள் வந்த திருப்பூரில் வாலிபரிடம் பணம் பறித்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் அருகே உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 48). டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நல்லூர் ஈஸ்வரன் கோவில் அடுத்துள்ள எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஆனந்தை மறித்து தான் போலீஸ் என்றும், சீருடை இல்லாமல் பணியில் இருப்பதாகவும் கூறி இருசக்கர வாகனத்துக்கான ஆவணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கேட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.100 பெற்றுக்கொண்டு அனுப்பி விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்த் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நல்லூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த விமல்(37) என்பதும், இவர் முத்தனம்பாளையம் பொன்முத்துநகரில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    கடந்த சில நாட்களாக விமல் இதுபோல் நல்லூர் பகுதிகளில் நின்று கொண்டு, பல இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வத்தலக்குண்டுவில் சிலை திருட்டு வழக்கில் கேரள வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு 9 கிலோ எடையுள்ள புத்தர் சிலை மற்றும் 15 கிலோ எடை கொண்ட கிருஷ்ணன் சிலை ஆகியவை திருடு போனது. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரில் ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபரிந்த கேரளாவைச் சேர்ந்த ஜோதீஸ் (வயது 31) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரும் தனிப்படை அமைத்து ஜோதீசை தேடி வந்தனர். வத்தலக்குண்டு அருகே சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சிலை கடத்தலில் தேடப்பட்டு வந்த ஜோதீஸ் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். வேறு ஏதேனும் சிலை கடத்தல் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் எந்திரத்துக்குள் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு சூட்கேசில் இருந்த சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ)‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகளை சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும்.

    இதனை கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். 
    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ரூ.1 கோடி தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில், சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ) ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகள் சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×