search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப கட்டுப்பாடு"

    • தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
    • 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (குடும்ப கட்டுப்பாடு) விதிகள் 2001-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, பட்டர்பிளை நைலான் வலைகளைக் கொண்டு நாய்கள் பிடித்து அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று, மயக்க மருந்து செலுத்தி அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்படுகிறது. அதன் பின்பு பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரித்து காயங்கள்ஆறிய பிறகு மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகிறது.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இது வரை 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மேலும் கருத்தடை செய்யாத நாய்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
    • முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

    போபால்:

    மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது. அந்த மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம்சாட்டினார். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தந்திருக்கலாம் என்றும் கூறினார்.

    'மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம். 6,000 ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என எங்களுக்கு தெரியாது' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ. மூலம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்களை துரத்துவதும், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சமீப காலமாக குடும்ப கட்டுப்பாடுகள் செய்யாததால் நாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

    இதனையடுத்து சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:

    மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏற்கனவே தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட என். ஜி. ஓ. மூலம் அடுத்த வாரம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் புனரமைக்கப்பட்டுள்ளது. நாய்களை பயிற்சி பெற்ற தூய்மை பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    3 நாள் அங்கேயே வைக்கப்பட்டு பின்னர் எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் விடுவிக்கப்படும். இதனால் தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×