search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிவி பழம்"

    உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன.
    நியூசிலாந்தில்தான் கிவி பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. நியூசிலாந்து தான் கிவி பழத்தை அதிகம் விளைவிக் கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு சீனத்து நெல்லிக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.

    இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் விரும்பி வாங்கி சாப்பிடலாம். கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சூழலில், அதற்கு முன்னதாக பல வகையான நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. அப்போது ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு.

    வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானது தான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.

    உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். இத்தனை நன்மைகள் இருப்பதால் கிவி பழத்தை நிறைய சாப்பிடலாம்.
    கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது. கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    கிவி பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை காட்டிலும் கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீளலாம்.

    இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் சாப்பிடலாம்.

    இந்த பழத்தில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. அதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் கிவி உதவுகிறது.

    கர்ப்பிணி பெண்களும் இதனை சாப்பிடலாம். இது கருவின் வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது. வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின்கள் ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் கிவியில் இருக்கிறது. ரத்த நாளங்கள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கும், பார்வைத்திறன் மேம்படவும் இது உதவுகிறது. 
    கிவி பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.

    ‘கிவி’ என்பது நாம் அதிகம் உட்கொள்ளாத கனி. இதன் விலையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது, கிவி.

    உதாரணமாக, இப்பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், அது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

    மாரடைப்புக்கு முன் பலவகையான நோயியல் நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, கட்டியான அடைப்பாக மாறி, இதயத் தமனிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

    இவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும். இப்பழத்தில் ‘போலேட்’ என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட மிக அதிக அளவில் உள்ளன.

    இந்தச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளவை ஆகும். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

    கிவி பழத்தில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

    இப்பழத்தில் உள்ள வைட்டமின் இ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கத் துணைபுரிவதுடன், பெண்கள் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகிறது.
    ×