search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நூற்றாண்டு"

    • கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டம்; 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஆ.ராசா. எம்.பி. ஆகியோர் வழங்குகின்றனர்.
    • தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங் கள் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் மற்றும் பல்வேறு அணிகளின் சார்பில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.முக. சார்பில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் காளையார் கோவில் தெப்பக்குளம் தென்கரை யில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறு கிறது. ஒன்றிய செயலா ளர்கள் யோக.கிருஷ்ண குமார், ஆர்.எம்.கென்னடி ஆகியோர் வரவேற்றுப் பேசுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ஆர்.முத்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷணி கவிராஜ், நி ர்வாகிகள் முத்து, வனிதா கண்ணதாசன், கருப்புசாமி, பி.கந்தசாமி,சி.குழந்தை சாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தேவர் அருட்செல்வி அரசு, எஸ்தர்மேரி ஸ்டிபன், சவுந்திரராஜன், தினேஷ் அரசு, ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யும், கருணாநிதி குறித்தும் சிவகங்கை மாவட்ட செய லாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத் தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள் கிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் வே.ஆரோக்கியசாமி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் பாக முக வர்களுக்கு கைபேசி வழங்குதல், கைம்பெண்க ளுக்கு தையல் எந்திரம் வழங்குதல், முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கு தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்குதல், ஆதர வற்ற தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    • அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்
    • வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா.வெங்கட், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சிவராமன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம், நிர்வாகிகள் சுந்தரம், தியாகராஜன் உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாஜா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    இதில் வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், திமுக நகர செயலாளர் தில்லை உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இறைவன், ஜெஆர்30 , ஜெ.ஆர்.31 மற்றும் சைரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இதையடுத்து ஜெயம் ரவி கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, கலைஞர் நம்மோடு இல்லை என்றாலும் அவரது கருத்துகள் நம்முடன் இருக்கிறது என்பதுதான் மிகவும் சந்தோஷமான விஷயம். என்னை அனைவரும் கேட்டார்கள் கட்சி சார்பாக வந்திருக்கிறீர்களா? என்று ஆனால் நான் கலை சார்பாக வந்திருக்கிறேன். ஆனால், கட்சி சார்பாகவும் வந்திருக்கிறேன் சினிமா என்ற கட்சி சார்பாக. ஏனென்றால் கருணாநிதியும் முதல் கட்சி சினிமா கட்சிதான் நம் கட்சியும் அந்த கட்சிதான்.

    கருணாநிதியை நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் கையால் கலைமாமணி விருது வாங்கியது என்னால் மறக்க முடியாது. அதைவிட ஒரு பெரிய வாழ்த்து எந்த கலைஞனுக்கும் கிடைக்காது. கலைஞரின் 100 ஆண்டு என்பது அடுத்த 100-வது ஆண்டுக்கு முதல் படி.


    தன் எழுத்தில் தலைவர்களை உருவாக்குவது கருணாநிதி மட்டும்தான். அந்த உயிரோட்டம் எந்த எழுத்தாளரிடமும் நாம் பார்க்க முடியாது. கலைஞரின் வசனங்கள் பேசி பலர் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். என்னால் நடிக்க முடியும் என்பதற்கு அளவு அவரின் வசனம் தான். 'பராசக்தி' திரைப்படத்தின் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய ஆசையும், அதை பேசி நடித்துவிட்டால், அதில் குறைந்தபட்ச அளவு வந்துவிட்டால் அவர் பெரிய நடிகர்.

    'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பழைமையான தமிழ் பேசி நடிக்க வேண்டியது இருந்தது. அப்போது கலைஞரின் வசனங்களை படித்து அந்த உச்சரிப்பை கற்றுக் கொண்டு தான் பேசினேன். கருணாநிதியின் சினிமா வழிக்காட்டுதலில் நாங்கள் பல பேர் வந்துவிட்டோம். கருணாநிதியால் மிகச்சிறந்த நடிகர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று பேசினார்.

    • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
    • இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 27-ந்தேதி அன்று ஒரு பெரிய அளவிலான "கால்நடை மருத்துவ முகாம்" கால்நடை பராமரிப்புத்துறை,

    ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம்,

    மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள்,

    நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.

    மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மூலம் நடைமுறை படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்களிடமிருந்து பதில் பெறலாம்.

    இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 விவசாயிகளுக்கு விருதுகளும், கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் 27-ந்தேதி அன்று ஈரோடு ஒன்றியம், என்.தயிர்பாளையம் கிராமத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×