search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Century"

    • அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்
    • வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா.வெங்கட், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிமெண்டு சேமிப்பு கிடங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சிவராமன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம், நிர்வாகிகள் சுந்தரம், தியாகராஜன் உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாஜா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் வாலாஜா பஸ் நிலையம் விரிவாக்க பணிக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    இதில் வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், திமுக நகர செயலாளர் தில்லை உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைகளின் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.
    • தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் தொடர்பான விவரங்கள் முழுமையாக தொகுக்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைகளின் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக அரசு துறைகளில் உள்ள செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற அரசு துறை செயலாளர்கள் அனைவரும் துறை வாரியாக கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள் பற்றிய தகவல்களை திரட்டி வந்திருந்தனர்.

    இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முழுமையான விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட உள்ளன.

    இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் கருணாநிதி தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்த காலங்களில் அவர் ஆற்றிய அரும்பணிகள் தொடர்பான தகவல்களோடு துறை செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×