search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand Veterinary Camp on"

    • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
    • இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 27-ந்தேதி அன்று ஒரு பெரிய அளவிலான "கால்நடை மருத்துவ முகாம்" கால்நடை பராமரிப்புத்துறை,

    ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம்,

    மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள்,

    நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.

    மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மூலம் நடைமுறை படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்களிடமிருந்து பதில் பெறலாம்.

    இம்முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 விவசாயிகளுக்கு விருதுகளும், கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் 27-ந்தேதி அன்று ஈரோடு ஒன்றியம், என்.தயிர்பாளையம் கிராமத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×