search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனரா வங்கி"

    • தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வகுப்பானது வருகிற 9-ந்தேதி (திங்ட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதில் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். இதில் குறைந்த காலியிடங்களே உள்ளது. எனவே பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பேன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றுடன் நேரில் வரவும். அல்லது http://tinyurl.com/4z2 என்ற ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மேலும் இதுபற்றி தெரிந்து கொள்ள 9952518441, 8610533436, 9489043923 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கனரா வங்கி சார்பில் கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடந்தத.
    • மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மதுரை

    கனரா வங்கி மதுரை வட்ட அலுவலகம் சார்பில் விடுமுறை நாளையொட்டி கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கனரா வங்கியின் மதுரை வட்ட பொதுமேலாளர் டி.வீ.கே. மோகன் தொடங்கி வைத் தார்.

    இதில் மதுரை வட்டத்தின் கீழ் உள்ள 405 கிளைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமை மற்றும் குழு உணர்வினை வெளிப்படுத்தினர்.

    விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மண்டலத்தின் ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்வு உடல் ஆரோக்கியத்தை ஊக்கு விப்பது மட்டுமல்லாமல் மனவளத்தை பேணுவதோடு ஊழியர்களிடையே நல்ல நட்புறவை வளர்ப்பதாக அமைத்தது என்பது சிறப்பம்சமாகும்.

    கனரா வங்கி ஊழயர்க ளுக்கான மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டி களில் மதுரை வட்டத்தின் ஒரு குழு பங்கேற்று பிட் இந்தியா இயக்கத்தை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

    • இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் நடக்கிறது.
    • பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் 1-11-2022 முதல் 30-11-2022 வரை நடக்கிறது. கனரா வங்கியின் (மாவட்ட முன்னோடி வங்கி) சார்பாக காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம்,மாவட்ட வளர்ச்சி அதிகாரி (நபார்டு) அசோக்குமார், வங்கியாளர்கள் , அனைத்து தொழில் முனைவோர், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் கூறுகையில், நிதி நிறுவன மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை மேம்படுத்துதல், வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களுக்கான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை , பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வங்கியின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் நிலையில் அதனை அந்தந்த வங்கியின் இணைய தளத்தில் புகாராக பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் அதனை ஆர்.பி.ஐ. இணையதளத்தில் காணும் வங்கி குறை தீர்ப்பு அதிகாரியிடம் cms.rbi.in என்ற இணையதளம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றார். 

    • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

    மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

    ×