search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு அறை"

    • மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்
    • பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் யாசகம் பெறுபவர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டப்படுகின்றன. இந்த அறைகள் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே கட்டப்பட இருக்கிறது. இந்த கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பஸ் நிலையம் முழுவதும் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பி ரமணியன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    • ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் உள்ள கடையை அகற்ற 15 நாட்கள் கெடு விடுக்கப்பட்டுள்ளது.
    • கடை அகற்றிய பிறகு முழுமையாக பயணிகளுக்கான ஓய்வு அறையாக பயன்படுத்தப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராமசுப்பிரமணியன். இவர் சென்னையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவரிடம் மனுதாக்கல் செய்தார்.

    அதில், மக்கள் இலவசமாக பயன்படுத்த கட்டிய கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கின்றனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் பேக்கரி கடை நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார்.

    இந்த மனு மீது கடந்த மாதம் விசாரணை நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி பொதுகழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கழிப்பறைகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில் உள்ள கடை உரிமை காலத்தை நீட்டிக்க கூடாது.ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறையாக பயன்படுத்த வேண்டும் என்று ஜூலை 27-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் மாலிக் பெரோஸ்கான் உத்தரவிட்டார்.

    இருப்பினும், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இதுவரை அந்த கடை அகற்றப்படவில்லை. பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதியில் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் சேகர் கூறுகையில், நடுவர் மன்ற உத்தரவுப்படி கடையை அகற்ற 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். கடை அகற்றிய பிறகு முழுமையாக பயணிகளுக்கான ஓய்வு அறையாக பயன்படுத்தப்படும், என்றார்.

    • குண்டேரிபள்ளம் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு அறை, குடிநீர், வாகனம் நிறுத்தும் இடம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
    • அமைச்சர் முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் ஓய்வறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு கம்பி வேலி அமைத்தல் மற்றும் அணுகு சாலை அமைத்தல் ஆகிய சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடிவடைந்த நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது வினோபா நகரை சேர்ந்த விவசாயிகள் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு, பூமிதான இடத்திற்கு பட்டா உட்பட பல்வேறு அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டி மனுக்களை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சுப்பிரமணியம், கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தாசில்தார் ஆசியா, சிட்கோ வாரிய முன்னாள் தலைவரும் ஐகோர்ட்டு வக்கீலுமான சிந்து ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சதிஷ்குமார், உதவி பொறியாளர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×