search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஏ.எஸ்."

    • யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.
    • ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை டிஜிட்டல் நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவருடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர் வட்டத்தலைவர் லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் பீர்பாஷா, வரவேற்றார். அவ்வகையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷ் குமாருக்கு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுடன் அவர் பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.எனவே, இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவசியம்.வேறு எந்த கவனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. தேர்வில் எந்த மாதிரியான வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, சுயமாக புரிந்து வைத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

    ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத்திட்டம் பெரியது. அதை புரிந்து படிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களின் ஆலோசனைகள் பெற்றால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், தண்டபாணி, வேலாயுதம், கண்டிமுத்து, விஜயகுமார், கண்ணபிரான், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×