search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்செல் மேக்சிஸ்"

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று 4-வது முறையாக விசாரணை நடத்தியது. #AircelMaxis #Chidambaram
    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளிவந்தது.

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 24 ந்தேதி  ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், இன்றும் 4 வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதபரத்திடம் விசாரணை நடத்தினர். சிதம்பரம் இன்று புதுடெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய வாக்குமூலம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப்பட்டது.

    கடந்த 24 ந்தேதி அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிதம்பரத்தின் மகனான கார்த்தியிடம் இந்த வழக்கில், இரண்டு முறை அமலாக்கதுறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    ×