search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எம் கீரவாணி"

    • 'சந்திரமுகி -2' திரைபடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை கீரவாணி கொடுத்துள்ளார். அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கும் கீரவாணி 'சந்திராவுக்கு பின்னணி இசையமைத்துவிட்டேன். முகிக்கு இன்றைக்கு ஆரம்பிக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.
    • இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

    ×