search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் உயிரிழப்பு"

    • தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 47). இவர் தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று மாலை வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பினார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இன்று காலை அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.

    அப்போது அதில் பேசியவர்கள் தர்மர் கூட்டம்புளி கால்வாய் அருகே இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்க்கும்போது தர்மர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் பெருமாள் வேலை பார்த்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). இவர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பெருமாள், வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அவர் கோவிலில் பணிகளை செய்து கொண்டிருந்த மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. மேகங்கள் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    கோவிலுக்குள்ளும் வெளிச்சம் இல்லாததால், பெருமாள் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பெருமாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெருமாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    மழையின் காரணமாக சுவிட்ச் போர்டு இருந்த கோவில் சுவற்றில் நீர் கசிந்து இருந்ததும் அது தெரியாமல் பெருமாள் சுவிட்ச் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பெருமாளுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    • நெல்லையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பழகனை கொண்டு சென்றுள்ளனர்.

    நெல்லை:

    சென்னை திருவல்லிக்கேனி அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 43). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    தற்போது நெல்லையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிக்காக அன்பழகன் வந்துள்ளார்.

    சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சக ஊழியரான சரத் என்பவருடன் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். சிறிது நேரத்தில் அன்பழகன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரத், விடுதி ஊழியர்களை அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பழகனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் நெஞ்சுவலியால் இறந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×