search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி பேராசிரியர் கைது"

    தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய உதவி பேராசிரியர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

    இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். கைதான கோபால கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
    புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாடலிங்காக பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான பாரதியார் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கலைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கூடத்தில் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்த சுசிலா (வயது 63) என்ற பெண் மாடலிங்காக வேலை பார்த்து வந்தார்.

    சிற்பங்கள் வடிவமைக்க மற்றும் ஓவியங்கள் வரைய மாடலிங்காக போஸ் கொடுப்பது இவரது பணியாகும். பல்கலைக்கூடத்தில் ராஜேந்திரன் (58) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று சுசிலா பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராஜேந்திரன் சுசிலாவிடம் சிறிய வேலை இருக்கிறது. எனது அறைக்கு வா என்று கூறினார்.

    அங்கு வந்த சுசிலாவிடம் ராஜேந்திரன் செக்ஸ் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. உடனே சுசிலா அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதுபற்றி அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×